”சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க மது குடிப்பதை தவிர்த்துவிடுங்கள்” - அமைச்சர் அறிவுரை

”சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க மது குடிப்பதை தவிர்த்துவிடுங்கள்” - அமைச்சர் அறிவுரை
”சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க மது குடிப்பதை தவிர்த்துவிடுங்கள்” - அமைச்சர் அறிவுரை

கோடைக் காலத்தில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.

அக்னி நட்சத்திர காலம் இன்று தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துவத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது. அப்போது செய்தியாளர்களிம் பேசிய அமைச்சர், தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது இல்லை, வெளியில் வந்தாலே தண்ணீர் அருந்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

உடலை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என்றும், நீர்சத்து நிறைந்த சீசன் பழங்களை உட்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். ஆம்லேட் போடும் அளவுக்கு வெயில் அதிகமாக இருப்பதால், வாகனங்களின் சீட்டில் துணியை போட்டு வையுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் மீது குழந்தைகளை அமர வைக்க வேண்டாம் எனவும், வெயில் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள், படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார். பிற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை அவசியம் இல்லாமல் மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்த அவர், கோடை காலத்தில் உடல் நலன் பாதிக்கப்படும் என்பதால் மது பிரியர்கள் மது குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை விடுவது தொடர்பாக பள்ளி கல்வித்துறையினர் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் வெயில் கடுமையாக வாட்டி எடுக்கும் நிலையில், இரவில் கடுமையான புழுக்கம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com