எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ் தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியன்

எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ் தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியன்

எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ் தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியன்
Published on

கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். நிகழ்வின்போது அவருடன் மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இருந்தார்.

பட்டியலை வெளியிட்ட அவர், முதல் 10 இடம் பிடித்த மாணவர்களின் பட்டியலை வாசித்தார்.

அதன்படி நாமக்கல் கீதாஞ்சலி 710; நாமக்கல் பிரவீன் 710; திருவள்ளூர் பிரசன் ஜித்தன் 710; சென்னை நயகிரிவாஸ் 705; சேலம் ஹர்சிதா 705; தூத்தூக்குடி கரன் 705; சேலம் மணிமாறன் 697 என்றுள்ளனர். சுயநிதி கோட்டாவின் கீழ், திருப்பூர் கவிநேஷ் 710 ஆகியவர்கள் பட்டியலில் வரிசைப்படி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com