நிலுவை தொகை வழங்காத சர்க்கரை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

நிலுவை தொகை வழங்காத சர்க்கரை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
நிலுவை தொகை வழங்காத சர்க்கரை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

கரும்பு விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்பட்டுள்ள நிலுவைத் தொகையினை வழங்காத சர்க்கரை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் அரியலூர் மாவட்டம் கீழணைக்கு வந்தடைந்தது. அங்கிருந்து பாசனத்திற்காக தண்ணீரை தொழில்துறை அமைச்சர் சம்பத் திறந்து வைத்தார். வடவாறு வாய்க்கால் மூலம் வினாடிக்கு 1100 கன அடியும், வடக்கு ராஜன் கால்வாய் மூலம் வினாடிக்கு 300 கன அடியும், தெற்கு ராஜன் கால்வாய் மூலம் வினாடிக்கு 400 கன அடியும் என வினாடிக்கு 1800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத், தனியார் சக்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்பட்ட நிலுவை தொகையினை உடனே வழங்க வேண்டும் என்று கூறினார். இல்லையென்றால் கரும்பு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com