தமிழ்நாடு
'ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும்' - கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
'ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும்' - கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் நீதிமன்ற உத்தரவின் பேரில் மீட்கப்பட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செம்மஞ்சேரியில் அரசுக்கு சொந்தமான 91.04 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து அந்நிலம் மீட்கப்பட்டுள்ளது. அங்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.