'மழையினால் உயிர்சேதமோ, தீவிர பாதிப்புகளோ இல்லை' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம்

'உயிர் சேதமோ எந்த தீவிர பாதிப்புகளோ இதுவரை ஏற்படவில்லை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே இதற்கு காரணம்' எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்Twitter

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முதலமைச்சர் திருவாரூரிலிருந்து மழையை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கேட்டறிந்து வருகிறார். முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் பேசிக்கொண்டு வருகிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளதால் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

chennai rain
chennai rainpt desk

சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதையில் 1 சுரங்கப் பாதையில் மட்டுமே நீர் தேங்கியது. கணேசபுரம் சுரங்கப் பாதையில் மட்டும்தான் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ் மீனா அங்கு களத்தில் தான் இருக்கிறார். நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் எந்த இடங்களில் எல்லாம் கடந்தமுறை பாதிப்பு ஏற்பட்டதோ அங்கு இந்த முறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். கூடுதல் தலைமை செயலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளும் களத்தில் உள்ளனர். 4 ஆயிரம் பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

chennai rain
chennai rain

உயிர் சேதமோ எந்த தீவிர பாதிப்புகளோ இதுவரை ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே இதற்கு காரணம். முழு நேரமும் மழை பெய்யும் நாட்களில் மீட்பு பணிகள் செய்ய தயாராக உள்ளோம். தமிழ்நாடு மீட்பு படையினர் 40 பேர் மாநகராட்சியுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மெட்ரோ வேலை நடக்கக் கூடிய இடங்களில் மட்டும் தான் லேசான தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. அதுவும் விரைவில் சரிசெய்யப்படும். சுரங்கப் பாதைகளில் தேங்கும் தண்ணீர் உடனடியாக மோட்டார்கள் மூலம் அகற்றி வருகிறோம். தண்ணீரை அகற்ற 260 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 26 மோட்டார் பம்புகள் மூலம் நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. 70% மழை நீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்றுள்ளதால் மழை நீர் பெருமளவில் தேங்கவில்லை" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com