சாத்தான்குளம் விவகாரம் ஒரு சென்சிட்டிவ் விஷயம் - அமைச்சர் காமராஜ்
சாத்தான்குளம் விவகாரத்தில் எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட்ட யாரும் தவறான தகவல்களை பரப்பக்கூடாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்
திருவாரூரில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக தடை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர்,
''சாத்தான்குளம் விவகாரத்தில் இந்த நிகழ்வு நடக்கக் கூடாத ஒரு நிகழ்வு. என்னை மிகவும் துக்கத்தில் ஆழ்த்திய ஒரு நிகழ்வு. இதுகுறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி என்னிடம் தெரிவித்தார். சாத்தான்குளம் விவகாரம் ஒரு சென்சிட்டிவ் விஷயம். அதில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட யாரும் தவறான தகவல்களை பரப்பக்கூடாது.
தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஏற்கெனவே அறிவித்த படி நடைமுறைக்கு வர உள்ளது. இந்த நிலையில்
வெளிமாநிலத்தவர் தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருந்தால் அவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். எனது குடும்பத்தைச் சேர்ந்த 32 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை என்று தெரிவித்தார்

