விஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

விஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

விஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
Published on

விஜய் போன்றோரின் பேச்சை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பிகில் இசைவெளியீட்டு விழாவில் பேசிய விஜய் நிகழ்கால அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வைத்தீங்கன்னா எல்லாம் சரியாக இருக்கும். அரசியலில் புகுந்து விளையாடுங்க; ஆனால் விளையாட்டுல அரசியலை கொண்டு வராதீங்க எனத் தெரிவித்த விஜய் சுபஸ்ரீ மரணம் போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசினார். 

விஜயின் அரசியல் பேச்சுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. சமூகப்பிரச்னைக்கு விஜய் குரல் கொடுக்கிறார் என ஒருதரப்பு பாராட்டினாலும், சரியான நேரம் பார்த்து பட விளம்பரத்துக்காகவே விஜய் பேசி வருவதாக மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் விஜயின் பேச்சுக்குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் வைத்துள்ளார்கள்; விஜய் போன்றோரின் பேச்சை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை. படம் ஓடுவதற்காக நடிகர்கள் பரபரப்பாக பேசுகிறார்கள். விஜய் யாருடைய பேச்சைக்கேட்டு பேசினார் எனத் தெரியவில்லை. தனது படம் ஓட வேண்டும் என்பதற்காக தன்னை அறியாமல் விஜய் பேசி இருப்பார்'' என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com