\
“சுஜித்தின் மரணம் பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்தது” - அமைச்சர் கடம்பூர் ராஜூ

“சுஜித்தின் மரணம் பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்தது” - அமைச்சர் கடம்பூர் ராஜூ

“சுஜித்தின் மரணம் பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்தது” - அமைச்சர் கடம்பூர் ராஜூ
Published on

சுஜித்தின் மரணம் பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்தது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்

தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இடைத் தேர்தலைப் போன்று அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் 100% வெற்றி பெறும்.
 என தெரிவித்தார். அப்போது கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை எம்எல்ஏக்கள் விரும்பவில்லை எனக் கூறப்படுவதாக தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த அவர், அதுபோன்ற எந்த ஒரு தனி விருப்பமும் தங்களது கட்சியில் கிடையாது என்றும் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்’’ என்றும் தெரிவித்தார். 

படங்களுக்கு சிறப்புக் காட்சி என்ற பெயரில் அரசு  நிர்ணயிக்கப்பட்ட ஒரு காட்சிக்கு அனுமதி வாங்கிவிட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட காட்சிகள்  ஒளிபரப்பப்படுகின்றன. அதனாலே சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை. இனி அது நடைமுறைப்படுத்தப்பட்டு சிறப்பு காட்சிகளுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும். சுஜித்தின் மரணம் பொது இடத்தில் நடந்த விபத்து கிடையாது. பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்தது என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com