திரையிட முடியாமல் நிலுவையில் பல படங்கள்.. புதிய வழி சொல்லும் அமைச்சர் கடம்பூர் ராஜூ..!

திரையிட முடியாமல் நிலுவையில் பல படங்கள்.. புதிய வழி சொல்லும் அமைச்சர் கடம்பூர் ராஜூ..!

திரையிட முடியாமல் நிலுவையில் பல படங்கள்.. புதிய வழி சொல்லும் அமைச்சர் கடம்பூர் ராஜூ..!
Published on

பெரிய திரையரங்குகளை பிரித்து கூடுதல் திரையரங்குகளை அமைத்துக்கொள்ள விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “ தமிழகத்தில் இன்றைக்கும் சுமார் 200 திரைப்படங்கள் திரையிடப்பட முடியாமல் நிலுவையில் இருக்கின்றன. பெரிய திரையரங்கு உரிமையாளர்கள் அதனை 3 திரையரங்குகளாக மாற்ற அனுமதி கேட்டுள்ளனர். இதனால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிகமான படங்களை திரையிட முடியும் என கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் இன்னும் ஓரிரு நாட்களில் திரையரங்குகளை பிரித்து கூடுதல் திரையரங்குகளை அமைத்துக்கொள்ள உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையும் விரைவில் வெளியிடப்பட உள்ளது. அப்போது அனைத்து திரைப்படங்களும் திரையிடப்படும் சூழல் உருவாகும்.

அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் மூலம் அனைத்து திரையரங்குகளும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது, அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். ஆன்லைனில் புதிய திரைப்படங்கள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என நாங்கள் உள்துறை செயலாளரிடம் ஆலோசனை நடத்தி உள்ளோம். திரைப்படத் துறையும், உள் துறையும் இணைந்து இந்தியாவிலேயே முன்னோடியாக ஆன்லைனில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதை கட்டுப்படுத்துகின்ற சூழல் உருவாக்கப்படும். 

மொத்தத்தில் திரைப்படத்துறை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்ற நிலை விரைவில் உருவாக்கப்படும். மாவட்டம்தோறும் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்யவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு அவர்கள் மாவட்டம் முழுவதும் நடைபெறும் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மழை பெய்து கண்மாய், ஊருணிகளில் நீர் நிரம்பும் போது மக்கள் நேரடியாக அந்த பயனை அனுபவிக்கும் நிலை உருவாகும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com