
வசூல் ராஜா MBBS படம் மூலம் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
சில தினங்களுக்கு முன்பு சென்னை லயோலா கல்லூரி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கி நிற்க கூடாது என்றார். அரசியல் பேசாமல் கல்வி, விவசாயம் முன்னேறாது என்ற அவர், கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்து கொள்வார்கள் என்பதால்தான் அரசியலில் கறை படிந்து இருக்கிறது என்றும் தெரிவித்தார். அத்துடன் மாணவர்களின் கேள்விகளுக்கும் கமல் பதிலளித்தார்.
இந்நிலையில் கமலின் கருத்து குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கமல்ஹாசன் ஒரு இன்ஸ்டண்ட் சாம்பார் மாதிரி. திடீர் என வருவார் திடீர் என காணாமல் போய்விடுவார் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், வசூல் ராஜா MBBS படம் மூலம் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன் என நகைச்சுவையாக தெரிவித்தார். மேலும் பிக்பாஸ் ஒரு கலாசார சீரழிவு. அந்த வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.பிக்பாஸ் இல்லம் ஒரு அலிபாபா குகைபோல உள்ளது என தெரிவித்தார்