புயல் பாதிப்பை மதிப்பிட்டு நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்

புயல் பாதிப்பை மதிப்பிட்டு நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்

புயல் பாதிப்பை மதிப்பிட்டு நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்
Published on

புயல் பாதிப்புகளைக் மதிப்பிட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் களப்பணியில் ஈடுபட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாகைக்கு தென்கிழக்கே 95 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த ‘கஜா’ புயலின் கண்பகுதி இன்று அதிகாலை நாகை வேதராண் யம் இடையே கடந்தது. இதன் காரணமாக நாகை, கடலூர், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது.

பல இடங்களில் மின் மாற்றிகள் விழுந்துள்ளன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை மேற்கொண்ட தொடர் மற்றும் சீரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அனைத்து மீன்பிடி படகுகளும் கரைக்குத் திரும்பியதாக குறிப்பிட்டு ள்ளார். புயல் பாதிப்புகளைக் கண்காணித்து மீட்பு நடவடிக்கை எடுக்கவும், நிவாரணம் அளிக்கவும் ஏதுவாக கடலோர மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறை அதிகாரிகளும் களப்பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com