“இனமான பேராசிரியரை ஞாபகம் வச்சுக்கோங்க” - ஜெயக்குமார் கலகல

“இனமான பேராசிரியரை ஞாபகம் வச்சுக்கோங்க” - ஜெயக்குமார் கலகல
“இனமான பேராசிரியரை ஞாபகம் வச்சுக்கோங்க” - ஜெயக்குமார் கலகல

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய திமுக உறுப்பினர் தாயகம் கவி, தமிழ் வளர்ச்சித் துறையில் பல்வேறு குறைகள் உள்ளது. அந்தக் குறைகளை எல்லாம் சரிசெய்ய மு.க.ஸ்டாலின் முதல்வராக விரைவில் வருவார் எனத் தெரிவித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “வாத்தியார் படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி உள்ளது. அதை நான் நினைவுப்படுத்துகிறேன். அந்த விஷயத்திற்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார்” எனத் தெரிவித்தார்.

அதேபோல பேரவையில் திமுக உறுப்பினர்கள் பேசத் தொடங்கும் முன் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து உரையை தொடங்குவதை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்யும் விதமாக  பேசினார். அதாவது “எல்லோரையும் வாழ்த்துறீங்க. உங்க இனமான பேராசிரியர் அன்பழகனையும் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோங்கப்பா” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com