‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்

‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்
‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்

‘அசுரன்’ படத்தில் வரும் வில்லன் கேரக்டர் ஸ்டாலினுக்கு பொருந்தும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

எழுத்தாளர் பூமணி எழுதிய நாவல் ‘வெக்கை’.  இந்தக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ‘அசுரன்’. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல பாராட்டை பெற்று வருகிறது. 

இதைத்தொடர்ந்து ‘அசுரன்’ படம் மட்டுமல்ல பாடம் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியிருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுக்கள்” எனத் தெரிவித்திருந்தார். ஸ்டாலினின் பாராட்டுக்கு தனுஷூம் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘அசுரன்’ படம் குறித்த ஸ்டாலின் கருத்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். நாங்குநேரில் பிரச்சாரத்தின் பேது, ‘அசுரன்’ படம் குறித்து ஸ்டாலின் ட்வீட் வெளியிட்டது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், “ஸ்டாலின் ஜமீன்தார் தோரனையில் அமர்ந்து படம் பார்த்துள்ளார். ஜனநாயக நாட்டில் அனைவரும் சமம் என்று இல்லாமல் ஜமீன்தாராக இருந்து படத்தை பார்த்துள்ளார். அந்தப் படத்தில் வரும் வடக்கூரான் வில்லன் கேரக்டர் ஸ்டாலினுக்குப் பொருந்தும்” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com