\
எப்படி வேண்டுமானாலும் ஏசட்டும் கவலையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

எப்படி வேண்டுமானாலும் ஏசட்டும் கவலையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

எப்படி வேண்டுமானாலும் ஏசட்டும் கவலையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
Published on

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் ஏசட்டும் கவலை இல்லை. பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்போம் என்றுதான் எங்களைப் பொருத்தவரை சொல்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஓபிஎஸ்-க்கு இருக்கிற மக்கள் செல்வாக்கை கெடுக்க, அதிமுக அம்மா அணியில் உள்ள பலர் முயற்சிக்கிறார்கள். பேசுவது போல் பேசி, செய்ய வேண்டியதை செய்யலாம் என அந்த அணியினர் நினைக்கிறார்கள். ஆனால் நினைத்ததை நடத்தியே முடிப்பவரால் உருவாக்கப்பட்டவர் தான் ஓபிஎஸ். அவரால் உருவாக்கப்பட்டவர்கள்தான் நாங்கள் என்றார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அதிமுக அம்மா அணியின் அமைச்சர் ஜெயக்குமார், “அவர்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். ஏசட்டும். அதைப்பற்றிக் கவலையில்லை. எங்களைப் பொறுத்தவரை வாருங்கள், பேசுவோம், பிரச்னைகளை தீர்ப்போம் என்றுதான் சொல்கிறோம். தினந்தோறும் ஒவ்வொரு நிபந்தனை விதித்து பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். நாங்கள் எந்த விதத்திலும் முட்டுக்கட்டை போடுவதில்லை. அது தொண்டர்கள் அனைவருக்கும் தெரியும் என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com