”தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள் எதுவும் மூடப்படவில்லை” - அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்!

”தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள் எதுவும் மூடப்படவில்லை” எனச் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
அங்கன்வாடி மையம், கீதாஜீவன்
அங்கன்வாடி மையம், கீதாஜீவன்twitter

மாநிலம் முழுவதும் மொத்தமாக 10 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட உள்ளதாக, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தனர். குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு அங்கன்வாடி மையங்களை மூடும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுகுறித்து சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் புதிய தலைமுறைக்கு விளக்கமளித்தார். அவர், “அப்படி எதுவும் மூடப்படவில்லை. இது தவறான செய்தி. மொத்தமாக 54,431 மையங்கள் இருக்கின்றன. எல்லா மையங்களும் செயல்பட்டுத்தான் வருகின்றன. இதில் பணியாளர்கள் குறைவாக இருக்கும் அங்கன்வாடி மையங்களை அருகில் இருக்கும் வேறொரு மையத்துடன் இணைத்து தற்காலிகமாக செயல்பட வைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவதற்காக இரு அங்கன்வாடி மைய குழந்தைகளையும் ஒரே மையத்தில் இணைத்து அவர்களுக்கு பாடம் எடுக்கப்படுகிறது. அவ்வளவுதான்” எனப் பதிலளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com