\
minister gandhi contest again ranipet
அமைச்சர் காந்திபுதிய தலைமுறை

அமைச்சர் காந்தி மீண்டும் போட்டி.. ராணிப்பேட்டையில் வேட்பு மனுத் தாக்கல்!

திமுக சார்பில் ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
Published on

திமுக சார்பில் ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

திமுக சார்பில் ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் ராணிப்பேட்டை தொகுதியில் காந்தியின் மகன் வினோத் காந்தி பெயர் இடம்பெற்றிருந்தது. தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காத நிலையில் அமைச்சர் காந்தி அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. அவரது மகன் வினோத் காந்திக்கும் அவருக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவியதாக கூறப்பட்ட நிலையில் காந்தி இன்று ராணிப்பேட்டை தொகுதியில் ஏழாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் காந்தி, “எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. திமுக தலைவர் அறிவித்ததால் மீண்டும் போட்டி. வேட்புமனு தாக்கல் செய்யும்போது என் மகனும் என்னுடன் வந்துள்ளார். தலைவர் முடிவெடுத்து மீண்டும் என்னை போட்டியிடச் சொன்னார். சமூக வலைதளங்களில் தேவையில்லாததை பேசிக்கொண்டிருப்பார்கள்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com