\
அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு
Published on: 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத்தின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விருத்தாசலம் ரயில்வே சந்திப்பில் உள்ள பயணிகள் ஓய்வு அறை திறப்பு விழாவிற்காக தொழில்துறை அமைச்சர் சம்பத் நெய்வேலி வழியாக சென்றார். அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் அதிவேகமாக சென்று, செருத்தான்குப்பத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவர் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த அவர், என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com