”சேலம் 8 வழிச்சாலை: மத்திய அரசு கடிதத்துக்காக காத்திருக்கிறோம்”- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

”சேலம் 8 வழிச்சாலை: மத்திய அரசு கடிதத்துக்காக காத்திருக்கிறோம்”- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
”சேலம் 8 வழிச்சாலை: மத்திய அரசு கடிதத்துக்காக காத்திருக்கிறோம்”- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சேலம் 8 வழிச்சாலை விவகாரம் குறித்து பேசியுள்ளார் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு. இதுதொடர்பான அவர் “சேலம் 8 வழிச்சாலை குறித்து மத்திய அரசு இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசு கடிதம் அனுப்பும்பட்சத்தில், அதன்பின் முதல்வரின் கொள்கை முடிவுபடி செயல்படுவோம்” என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை யானைகவுனி பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “சென்னையில் நெடுஞ்சாலை துறையின் கீழ் உள்ள சாலைகளை சீரமைக்க 263 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றது. அனைத்து சாலைகளையும் மில்லிங் செய்து மறுசீரமைக்க அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

இந்த விஷயத்தில் சென்னையில் வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையிலேயே பணிகள் நடைபெறும். மாநகரில் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் 258 கி.மீ நீளமுள்ள சாலை பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சென்னையில் வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுவான திருப்புகழ் தலைமை அளித்த பரிந்துரை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இனி வரும் நாள்களில் அந்த பரிந்துரையின் அடிப்படையில் பணிகள் நடைபெறும்.

சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தை பொறுத்தவரை, அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதுமட்டுமின்றி மத்திய அரசு இதுவரை அதுகுறித்து கடிதமேதும் மாநில அரசுக்கு எழுதவில்லை. மத்திய அரசு கடிதம் அனுப்பும் பட்சத்தில் குறித்து கொள்கை முடிவு படி செயல்படுவோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com