\
நதிநீர் பிரச்னைகள் விவகாரம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் துரைமுருகன் இன்று சந்திப்பு

நதிநீர் பிரச்னைகள் விவகாரம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் துரைமுருகன் இன்று சந்திப்பு

நதிநீர் பிரச்னைகள் விவகாரம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் துரைமுருகன் இன்று சந்திப்பு
Published on

டெல்லி சென்றுள்ள தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று பிற்பகலில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பேசவுள்ளார். அப்போது அவர் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையேயான நதிநீர் பிரச்னைகள் குறித்து விரிவாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேகதாது அணை விவகாரம், மார்க்கண்டேய அணை கட்டுமானம், உள்ளிட்டவற்கு தமிழகத்தின் எதிர்ப்பை அமைச்சர் துரைமுருகன் பதிவு செய்வார் எனத் தெரிகிறது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீர் குறித்தும் பேசவிருப்பதாக கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com