அமைச்சர் துரைமுருகன்எக்ஸ் தளம்
தமிழ்நாடு
ED சோதனைக்கு இடையே டெல்லி பயணம் ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
“அமலாக்கத்துறை சோதனைக்கும், எனது டெல்லி பயணத்திற்கும் சம்பந்தமில்லை” - அமைச்சர் துரைமுருகன்.
அமலாக்கத்துறை சோதனைக்கும், தனது டெல்லி பயணத்திற்கும் சம்பந்தமில்லை என, அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் எம். பி. கதிர் ஆனந்தின் வீடு மற்றும் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
துரைமுருகன்
சோதனைக்கிடையே, கதிர் ஆனந்தின் தந்தையான அமைச்சர் துரைமுருகன், டெல்லி சென்றார். இந்நிலையில், நேற்றிரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “எனது இலாகா சம்பந்தமான கூட்டத்திற்காக டெல்லி சென்றிருந்தேன். அமலாக்கத்துறை சோதனை பழகிப்போனதுதான்” என தெரிவித்தார்.