“ஒழுங்காற்றுக்குழு ஒழுங்கா ஆற்றல..எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்குது”- அமைச்சர்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா மதிக்கவில்லை என அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், "விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என கேட்டோம். ஆனால் அவர்கள் 2600 கனஅடி நீர் வழங்க பரிந்துரைத்துள்ளனர். ஜூன் முதல் இதுவரை வழங்க வேண்டிய 140 டிஎம்சி தண்ணீரில் 56 டிஎம்சியே கொடுத்துள்ளனர். எதிரிநாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது. இதுவரை இருந்த கர்நாடக முதல்வர்களில் யாரும் இவ்வளவு பிடிவாதமாய் இருந்து நான் பார்த்ததில்லை” என கூறியுள்ளார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com