அமித் ஷா -துரைமுருகன்
அமித் ஷா -துரைமுருகன்முகநூல்

”சொல்லுதல் யார்க்கும்..” - அமித் ஷாவின் பேச்சுக்கு திருக்குறள் மூலம் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்!

அரக்கோணத்தில் அமித் ஷா பேச்சு, திருக்குறளில் பதிலளித்த துரைமுருகன்!
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தக்கோலம் பயிற்சி மையத்தில், சிஐஎஸ்எப் படையின் 56ஆவது ஆண்டு எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது.

ராஜாதித்ய சோழன்’ பயிற்சி மையத்தில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். மேலும், இதில், பாதுகாப்பு மற்றும் மீட்பு ஒத்திகைகளில் ஈடுபட்டு, சிஐஎஸ்எப் வீரர்கள், தங்கள் திறனை வெளிப்படுத்தினர். பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, வீரர்களின் சாகச நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

இதில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ” மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. மருத்துவம், பொறியியல் படிப்புகளையும் மாநில மொழிகளில் படிப்பவதற்கான நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. இதற்காக மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகள் இந்திய பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற ரத்தினங்கள். மத்திய ஆயுதக் காவல் படை காவலர்களுக்கான தேர்வு முதலில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ், கன்னடம் உள்ளிட்ட 13 உள்ளூர் மொழிகளிலும் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமித் ஷாவின் பேச்சுக்கு திருக்குறள் மூலம் பதிலளித்துள்ளார் துரைமுருகன். வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதில், ”சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி கூறிச் சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com