தமிழ்நாடு
“பாஜக - ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளார் போல் பரப்புரை செய்கிறார் ஆளுநர்” - அமைச்சர் துரைமுருகன்!
“உயர்நீதிமன்ற உத்தரவைகூட படிக்காமல் ஆளுநர் ரவி, பாஜக - ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளார் போல் பரப்புரை செய்கிறார்” - தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்.
“திருப்பத்தூர் நாயக்கனேரி ஊராட்சி மன்றத்தலைவர் பதவியேற்பு தொடர்பாக ஆளுநரின் பேச்சு கண்டனத்திற்குரியது. உயர்நீதிமன்ற உத்தரவைகூட படிக்காமல் ஆளுநர் பொறுப்பிலுள்ள ரவி, பட்டியலினத் தலைவர் பதவியேர்பு பற்றி அமைதியை சீர்குலைக்கும் வகையில் பரப்புரை செய்வதா?
minister duraimuruganpt desk
உண்மைக்கு புறம்பான பேச்சுகளை ஆளுநர் தவிர்க்க வேண்டும். அரசியல் பேசவேண்டுமென்றால், அரசியல் தலைவராக மாறிக்கொண்டு அவர் பேசலாம்” - என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். முழு விவரத்தை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.