\
வீராணம் ஏரி தூர்வாரப்படும் - நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி

வீராணம் ஏரி தூர்வாரப்படும் - நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி

வீராணம் ஏரி தூர்வாரப்படும் - நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி
Published on

வீராணம் ஏரி தூர்வாரப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார். 

இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வீராணம் ஏரி கடந்த சில ஆண்டுகளாக தூர்வாராமல் அகலப்படுத்தப் படாமல் இருக்கிறது. கடந்த 1962-ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே கிருஷ்ணமூர்த்தி வைத்த கோரிக்கை போலவே தானும் வைப்பதாக விடுதலை சிறுத்தைக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ‘’முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது வீராணம் ஏரியை தூர்வாரி கரையை அகலப்படுத்தி பராமரிக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ஏரியை தூர் வாரவும் இல்லை; பராமரிக்கவும் இல்லை. எனவே நிச்சயமாக வீராணம் ஏரி தூர்வாரப்படும்" என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் உறுதியளித்திருக்கிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com