தமிழ்நாடு
அதிமுக தலைவர்கள் சிலர் பதவிக்காக வெளியே சென்றுவிட்டு கட்சிக்கு வருகின்றனர்: சி.வி.சண்முகம்
அதிமுக தலைவர்கள் சிலர் பதவிக்காக வெளியே சென்றுவிட்டு கட்சிக்கு வருகின்றனர்: சி.வி.சண்முகம்
அதிமுக தலைவர்கள் பதவிக்காக வெளியே சென்றுவிட்டு மீண்டும் கட்சிக்கு வருவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ‘’அதிமுகவின் தொண்டர்கள் எங்கும் செல்லாமல் உறுதியாக நமது கட்சியிலேயே உள்ளனர்.
ஆனால் அதிமுக தலைவர்கள் சிலர் பதவிக்காக வெளியே சென்றுவிட்டு மீண்டும் கட்சிக்கு திரும்புகின்றனர்’’ என்றார். அமைச்சரின் இப்பேச்சால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.