தமிழ்நாடு
பேரறிவாளன் விடுதலையை நீதிமன்றம் முடிவுசெய்யும்: அமைச்சர் சி.வி.சண்முகம்
பேரறிவாளன் விடுதலையை நீதிமன்றம் முடிவுசெய்யும்: அமைச்சர் சி.வி.சண்முகம்
பேரறிவாளன் விடுதலையை, நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே முடிவு செய்ய இயலும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், கடந்த ஒரு மாதத்திற்கு முன் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். இவரது பரோல் காலம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கீரின்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சண்முகம், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பேசினார். அப்போது பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தற்போது தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறினார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.