“ரசாயனம் பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால்...” அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் எங்காவது ரசாயனம் பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
anitha radhakrishnan
anitha radhakrishnanpt desk

தஞ்சை கரந்தையில் உள்ள அரசு மீன் குஞ்சு உற்பத்தி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் மீன் குஞ்சுகள் பராமரிப்பு குறித்தும் இன்று ஆய்வு செய்தார் அத்துறையின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். தொடர்ந்து அதிகாரியிடமும் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மீன் குஞ்சு தேவைக்கு இன்னமும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு மீன் உற்பத்தியை, தமிழகத்தில் உள்ள மீன் குஞ்சு பண்ணைகளை மேம்படுத்தி உயர்த்த முயல்கிறோம். தமிழ்நாட்டில் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

minister
minister

தற்போதைக்கு தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் 75 சதவீத மீன், தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடல் மீன்களும் சேர்த்து 6,500 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி தடை காலத்தில் மீனவர் குடும்பத்திற்கு தலா 5000 ரூபாய் தரக்கூடிய திட்டத்தை தமிழக முதல்வர் அமல்படுத்தி வருகிறார். இன்னும் அதிகரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. முதல்வர் கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்” என்றார்.

தொடந்து முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் தமிழகத்தில் ஐடி ரெய்டு நடப்பது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஐடி என்றால் என்ன என்று கேட்டு பதிலை தவிர்த்தார். பின் தொடர்ந்து பேசிய அவர், “தஞ்சையில் கடல் பசு பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. அதற்கான நிதி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

anitha radhakrishnan
anitha radhakrishnanpt desk

தமிழகத்தில் எங்காவது ரசாயன பொருட்களை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com