1-8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படுகிறதா?- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

1-8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படுகிறதா?- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
1-8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படுகிறதா?- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சியொன்றில் பங்குபெற்ற அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, “6 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் 1 ஆம் வகுப்பு முதல் பள்ளி திறக்க தனியார் பள்ளிகள் கேட்டு வரும் நிலையில், பெற்றோர்கள் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் அக்குழந்தைகளுக்கான பள்ளி திறப்பு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. எதுவாகினும் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை பொறுத்தே அடுத்தகட்ட முடிவு செய்யப்படும்.

இப்போது செயல்பட்டுவரும் வகுப்புகளுக்கு வரும் பள்ளிக் குழந்தைகளையும், ஆசிரியர்களோ நிர்வாகமோ பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது என கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். மேலும் கொரோனா காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உதவிட தனியார் பள்ளிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

நீட் தேர்வுக்கான சட்டப் போராட்டம் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக மத்திய அரசிடம் இவ்விவகாரத்தில் வலியுறுத்தி வருகிறோம்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com