கள்ளக்குறிச்சி: "தேவைப்பட்டால் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற ஆலோசிப்போம்”- அமைச்சர்

கள்ளக்குறிச்சி: "தேவைப்பட்டால் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற ஆலோசிப்போம்”- அமைச்சர்
கள்ளக்குறிச்சி: "தேவைப்பட்டால் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற ஆலோசிப்போம்”- அமைச்சர்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரத்தில் நிலை சரியாவதற்குள் தேவைப்பட்டால் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என பள்ளிக் கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவரிடம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. மேலும் இந்த விவகாரத்தில் ஏற்கெனவே மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்து அதனுடைய அறிக்கையை முறைப்படி காவல்துறையிடம் வழங்கி இருக்கிறார்.

அதேபோல் இந்த பள்ளியில் நிலைமை சரியாக 2 மாத காலம் ஆகலாம். ஆகவே தேவைப்பட்டால் பள்ளி மாணவர்களை வேறு பள்ளியில் மாற்ற நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கலாம். மேலும் இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக் கூடாது. அதேபோல் பெற்றோர்களின் உணர்வுகளை இந்த அரசு புரிந்து கொள்கிறது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வருகிறது. அதையொட்டி தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம்.

அரசு உத்தரவு இல்லாமல், பள்ளிகள் தன்னிச்சையாக விடுமுறை அறிவிக்க கூடாது. இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். தனியார் பள்ளி சங்கங்களுடன் இன்று இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறோம். மேலும் நிலைமை குறித்து கண்காணிக்க இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அதிகாரிகள் உடன் செல்ல இருக்கிறேன். எப்போதும் மாணவர்கள் தன்னம்பிக்கை உடன் இருக்க வேண்டும் என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com