``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

கொரோனா காரணமாக 2021-22 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மே மாதம் வரை நடைபெற்று தற்போது அம்மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் ஜூன் 13 ஆம் தேதி அடுத்த கல்வியாண்டு தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வித்துறை கூறியிருந்தது.

அதன்படி தமிழ்நாட்டில் வரும் கல்வி ஆண்டில் எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு என்பது குறித்த அறிவிப்பை தற்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரிவாக வழங்கியுள்ளார். அவர் அறிவித்ததன்படி தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கான வகுப்புகள் ஜூன் 13-ல் தொடங்க உள்ளது. போலவே 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி திறக்கப்படும் என தெரிகிறது. மேலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதி பள்ளிகள் திறக்கும். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைச்சர் இவற்றை அறிவித்துள்ளார்.

இவற்றுடன் காலாண்டு, அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வுக்கான அட்டவணை என அனைத்து விவரங்களையும் வெளியிடுவார் என கல்வித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே கூறியிருந்தனர். அந்த அறிவிப்பையும் அமைச்சர் தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி, மார்ச் 13, 2023-ல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்; தொடர்ந்து மார்ச் 14, 2023-ல் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும். அதன்பின் ஏப்ரல் 3, 2023-ல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com