தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு தேதி
பொதுத்தேர்வு தேதிமுகநூல்

தமிழ்நாட்டில் 10,11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை-2024 ஐ, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இரு மாதங்களுக்கு முன்னதாகவே வெளியிட்டிருந்தது. இருப்பினும் இந்த ஆண்டு நிகழவிருக்கும் மக்களவை தேர்தல் காரணமாக பொதுத்தேர்வு அட்டவணையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.

அவை அனைத்துக்கும் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விடையளித்துள்ளார்.

அமைச்சர் பேசுகையில் “தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பொதுத்தேர்வு தேதி அட்டவணை தேர்தல் ஆணையத்திடம் முன்னதாகாவே கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை தவிர்த்துதான் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதியை அறிவிக்கும். அதனால் திட்டமிடப்பட்ட தேதிகளில் 10,11 12 -ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை” என்றார்.

பொதுத்தேர்வு தேதி
“ஒரு பஸ் கூட வரல...” - பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலை உள்ளதாக மாணவர்கள் ஆதங்கம்!

முன்னதாக பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்த தேர்வு தேதிகள் -

10,11,12 வகுப்பிற்கான செய்முறை தேர்வுகள்:

பிப்ரவரி 23 - பிப்ரவரி 29 வரை 10 வகுப்பு,

பிப்ரவரி 19 - பிப்ரவரி 24 வரை 11 வகுப்பு,

பிப்ரவரி 12 - பிப்ரவரி 27 வரை 12 வகுப்பு,

10,11,12 வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள்:

மார்ச் 26 - ஏப்ரல் 8 வரை 10 வகுப்பு,

மார்ச் 4 - மார்ச் 24 வரை 11 வகுப்பு,

மார்ச் 1- மார்ச் 22 வரை 12 வகுப்பு,

தேர்வு முடிவுகள்:

இந்நிலையில் மே 10-ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் , மே 14-ம் தேதி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மே 6-ம் தேதி 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com