அமைச்சர் அன்பரசன்
அமைச்சர் அன்பரசன்pt desk

“சினிமா பார்த்துவிட்டு நடிகர்களை அங்கேயே மறந்துவிட வேண்டும்”- அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

“நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வர ஆரம்பித்து விட்டார்கள். சினிமாவை பார்த்த உடன் அங்கேயே மறந்து விட வேண்டும், அதன் பிறகு கட்சிதான் ஞாபகத்தில் வர வேண்டும்” என்று திமுக தொண்டர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Published on

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அமைச்சர் அன்பரசன்
அமைச்சர் அன்பரசன்pt desk

இதைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “இப்போது நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வர ஆரம்பித்து விட்டார்கள். சினிமாவை பார்த்த உடன் வந்துவிட வேண்டும், அங்கேயே மறந்து விட வேண்டும். சினிமாவை சும்மா பார்க்கவில்லை... நம்ம காசு கொடுத்து பார்க்கிறோம். ஆகவே பார்த்தோமா, ரசித்தோமா என்றிருந்துவிட்டு அதோடு வெளியில் வந்து விட வேண்டும், அதன் பிறகு கட்சிதான் ஞாபகத்தில் வர வேண்டுமே தவிர நடிகர்கள் ஞாபகம் வரக்கூடாது.

அமைச்சர் அன்பரசன்
செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நடிகர் மோகன்பாபு.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

இது விடியாத ஆட்சி, விடியாத ஆட்சி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அவர்களுக்கு விடியாத ஆட்சி மாதிரிதான் தெரியும். தேர்தல் அறிக்கையில் கூறிய 90 சதவீத வாக்குறுதிகளுக்கு மேல் நிறைவேற்றி உள்ளோம். மகளிர் உரிமைத் தொகை ஒன்றிரண்டு பேருக்கு வந்திருக்காது. இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், நிதி நெருக்கடி சரியான பிறகு அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com