\
''மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்'' - உள்துறை அமைச்சர் அமித் ஷா

''மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்'' - உள்துறை அமைச்சர் அமித் ஷா

''மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்'' - உள்துறை அமைச்சர் அமித் ஷா
Published on

நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார்.

'நிவர்' புயலானது நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதிதீவிர புயலாக நகர்ந்து வந்த நிவர் தீவிரப் புயலாக வலுவிழந்து கரையை கடந்தது. இதனால் புதுச்சேரியின் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடலூர், விழுப்புரம் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். இரண்டு மாநில முதல்வர்களையும் தொடர்பு கொண்டு பேசிய அமித் ஷா மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்துள்ளார்.

இதற்கிடையே இன்று மதியம் முதலமைச்சர் பழனிசாமி கடலூர் சென்று புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com