தமிழ்நாடு
உயிருக்கு போராடியவர்களை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
உயிருக்கு போராடியவர்களை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சிவகாசியில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இருவரை மீட்டு, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சிவகாசி ரிசர்வ்லயன் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிட திறப்பு விழாவிற்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இரண்டு, இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் மீனம்பட்டியைச் சேர்ந்த இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தனர்.
அதனைப் பார்த்ததும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காரைவிட்டு இறங்கி, உடனடியாக அவரின் பாதுகாப்பு வாகனத்தில் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.