அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாசிட்டிவ்!

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாசிட்டிவ்!

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாசிட்டிவ்!
Published on

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றிலிருந்து ஜூன் 30 ஆம் தேதிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.பி.அன்பழகனுக்கு மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்பு தனக்கு எந்த உடல் நலக்குறைவும் இல்லை ; கொரோனா தொற்றும் இல்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்திருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனையில் பங்கேற்றிருந்தார். அமைச்சர் அன்பழகனுடன், ஜெயக்குமார், காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com