கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் மரணம்!விடாமுயற்சி சூட்டிங்கிற்காக அஜர்பைஜான் சென்ற இடத்தில் சோகம்!

அஜித் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கலை இயக்குநராக பணியாற்றி வந்த மிலன் மாரடைப்பால் மரணமடைந்தார்.
art director Milan
art director Milanpt desk

சென்னை நகரில் பிறந்த மிலன் என்ற மிலன் பெர்னாண்டஸ். 1999 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் சாபு சிரிலுடன் இணைந்து பணியாற்றிய இவர், சிட்டிசன் (2001), தமிழன் (2002), ரெட் (2002), வில்லன் (2002), மற்றும் அந்நியன் (2005) ஆகிய படங்களில் உதவி கலை இயக்குநராக பணியாற்றிய மிகவும் பிரபலமானார்.

ajith and milan
ajith and milanpt desk

இந்நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு. மிலன், தனியாக கலை இயக்கத்தில் ஈடுபட முடிவு செய்தார். இதையடுத்து 2006 ஆம் ஆண்டு ஆர்யா, ரேணுகா மேனன், மற்றும் அக்ஷயா ஆகியோரின் நடிப்பில் உருவான கலாபக் காதலன் என்ற திரைப்படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானார். அடுத்ததாக ஓரம் போ என்ற படம் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதுவரை 30-க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர், விளம்பர படங்களுக்கு கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக சக்தி மசாலா, ஆச்சி மசாலா, ஆர்எம்கேவி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் போத்தீஸ் ஆகிய நிறுவனங்களின் விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார்.

milan and ajith
milan and ajithpt desk

அஜித் நடித்து வெளிவந்த பில்லா, விவேகம் உள்ளிட்ட திரைப் படங்களுக்கு கலை இயக்குநராக மிலன் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்திற்காக அஜர்பைஜான் சென்றிருந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையத்து அவரை அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து மருந்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த திடீர் மரணம் படப்பிடிப்பு சென்ற அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் அஜித் கண்ணீர் மல்க அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com