குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு  கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Published on

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச கல்வி தகுதியை 3 மாதங்களுக்குள் நிர்ணயிக்க தமிழ்நாடு அரசிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வு எழுதி தேர்வானப் பிறகு பிஇ படித்திருந்தால் அந்த வேலை கிடைக்காமல் போனதை அடுத்து ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மனுவில் தனக்கு உரிய தகுதியுடைய அரசுப் பணியை வழங்கும்படி உத்தரவிடுமாறு மனுதாரர் கூறியிருந்தார்.  

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், “அரசு பணிக்கு தேர்வான கூடுதல் கல்வி தகுதி உடையவர்களை அதிகாரிகள் வேலை வாங்க தயக்கம் காட்டிவருகின்றனர். இந்த நிலை அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஆகியவற்றிலும் தொடர்ந்து வருகிறது. மேலும் இது போன்ற கூடுதல் கல்வி தகுதியுடையவர்கள் தங்களின் வேலை நேரங்களில் பணி செய்யாமல் பிற போட்டி தேர்வுகளுக்கு தயாராவதையே முக்கிய பணியாக வைத்துள்ளனர். 

ஆகவே இது போன்ற அரசு துறை பணிகளுக்கு தமிழ் நாட்டு அரசின் நிர்வாக துறை செயலாளர் குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச கல்வி தகுதியை 3 மாத காலத்திற்குள் நிர்ணயிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com