லஞ்சம் கொடுக்க முயன்றதாக உள்துறை அமைச்சக பணியாளர் கைது

லஞ்சம் கொடுக்க முயன்றதாக உள்துறை அமைச்சக பணியாளர் கைது
லஞ்சம் கொடுக்க முயன்றதாக உள்துறை அமைச்சக பணியாளர் கைது

சிபிஐ அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக உள்துறை அமைச்சக பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க். இவர் சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக உள்ளார். இவரிடம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக மத்திய உள்துறை அமைச்சக பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர். உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் பணியாளரான தீரஜ் குமார் என்பவர், அஸ்ரா கார்கை தொடர்பு கொண்டு தினேஷ் சந்த் குப்தா என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.

(சிபிஐ அதிகாரி அஸ்ரா கார்க்)

தினேஷ் சந்த் குப்தா, சோமா எண்டர்பிரைசஸின் பிரதிநிதியாக உள்ளார். சோமா எண்டர்பிரைசஸ் என்பது ஒரு கட்டமைப்பு நிறுவனமாகும். இது போக்குவரத்து, நீர் மின்சாரம் மற்றும் நீர்வளம் மற்றும் பிற தொடர்பான திட்டங்களில் செயல்பட்டு வருகிறது. வழக்கு ஒன்றில் இந்நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட வேண்டும் எனக்கூறி தீரஜ் குமார், அஸ்ரா கார்க்கிடம் லஞ்ச பேரம் பேசியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 2 கோடி வரை லஞ்சம் கொடுக்கவும் முயற்சி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக அஸ்ரா கார்க் சிபிஐயிடம் புகார் தெரிவித்தார்.

இந்த விசாரணையில், சோமா எண்டர்பிரைஸின் இயக்குநரான பி.ஆர்.ராவ் லஞ்சம் வழங்கத்தான் தினேஷ் சந்த் மூலம் தீரஜ் உதவியை நாடியது தெரியவந்தது. . இதனையடுத்து தீரஜ் குமார், சோமா எண்டர்பிரைஸின் பி.ஆர்.ராவ், இடைத்தரகரான தினேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com