எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு
Published on

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சிறப்பு தபால் தலையை, அஞ்சல் துறை உயரதிகாரியிடம் இருந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com