\
கரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

கரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

கரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு
Published on

கரூரில் தமிழக அரசு சார்பில் இன்று நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து கோவை வழியாக கரூர் செல்கிறார். கரூர் திருமாநிலையூர் போக்குவரத்து பணிமனை அருகே நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர், 15 கோடியே 39 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் 22,282 பயனாளிகளுக்கு 88 கோடியே 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com