திருச்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: ரூ.102 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

திருச்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: ரூ.102 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

திருச்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: ரூ.102 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
Published on

திருச்சி பொன்மலை பகுதியில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இதற்காக முதலமைச்சர் பழனிசாமி திருச்சி சென்றுள்ளார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக புகைப்படக் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதியம் ஒரு மணி முதல் மூன்று மணி வரை க‌லை நிகழ்ச்சிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் மூன்று மணிக்கு நடைபெறும் விழாவில் முதலமைச்ச‌ர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போது 102 கோடி ரூபாய் மதிப்பில் 32,350 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com