\
சென்னையில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவு

சென்னையில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவு

சென்னையில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவு
Published on: 

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் மாநக காவல்துறை  அக்டோபர் 8-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பேனர் வைக்க அனுமதி வழங்கும்போது விதிமுறைகள், நீதிமன்ற வழிகாட்டுதல்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது விதிமீறி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் ஏற்கனவே அகற்றப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை பார்கிங் செய்ய போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com