தமிழ்நாடு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது
தமிழக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 51 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வறட்சி காரணமாக குறைந்துகொண்டே வந்தது. இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிரித்ததால் அங்கிருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதனால் தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 21,947 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 10 மாதங்களுக்குப் பிறகு 50 அடியை தாண்டியது.