சம்பா சாகுபடிக்காக சேலம் மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. தமிழக அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன் ஆகியோர் அணையை திறந்து வைக்கின்றனர்.
குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பது வழக்கமாக இருந்த நிலையில் கடந்த 6ஆண்டுகளாக மேட்டூர் அணை அந்த தேதியில் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடகாவில் தற்போது பெய்து வரும் மழையை அடுத்து தமிழகத்திற்கு உபரி தண்ணீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்ததை அடுத்து அணையை 2ம் தேதி திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 29ம் தேதி உத்தரவிட்டிருந்தார். முன்னதாக டெல்டா மாவட்டங்களில் 41 கோடியே 15 லட்சம் ரூபாயில் சம்பா தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் சம்பா சாகுபடி தொடங்கும் போதே விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறவேண்டும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.