\
நீர்வரத்து அதிகரித்தது: ஒரே நாளில் உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்

நீர்வரத்து அதிகரித்தது: ஒரே நாளில் உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்

நீர்வரத்து அதிகரித்தது: ஒரே நாளில் உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்
Published on

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 71.18 அடியாக உள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் கர்நாட‌காவிலிருந்து திறக்கப்படும் அதிகளவு தண்ணீர் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கணிமாக அதிகரித்துள்ளது. நேற்று 14,751 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 22,077 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 33.72 டி.எம்.சியாகவும், நீர் திறப்பு 700 கன அடியாகவும் உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 6,000 கன அடியும், கபினி அணையிலிருந்து 2,000 கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பயிர் சாகுபடி செய்துள்ள டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com