தமிழ்நாடு
நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 82 அடியாக இருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 280 கன அடியிலிருந்து 1,600 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 82.44 அடியாகவும், நீரிருப்பு 44.43 டி.எம்.சியாகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து 7 ஆயிரம் கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 885 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.