காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வடைந்து இன்று காலை நிலவரப்படி 90.70 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 48 ஆயிரத்து 221 கன அடி என்ற அளவில் நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 53.45 டி.எம்.சியாக இருக்கிறது. அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.