மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு... மலர்தூவி வரவேற்ற முதலமைச்சர்! #VideoStory

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று நீர் திறக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இணைந்து மலர் தூவி நீரை வரவேற்றனர்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர். அணையின் மதகுகள் வழியாக சீறிபாய்ந்த நீரை, மலர் தூவி முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். 90 ஆவது ஆண்டாக குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 867 கன அடி நீர் வரத்து தற்போது உள்ளது. நீர் இருப்பு 103.35 அடியாக உள்ளது. மேட்டூரில் இருந்து 3 ஆவது முறையாக தண்ணீரை திறந்து வைத்துள்ளார் முதலமைச்சர்.

பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார் மு.க ஸ்டாலின். இதனால் 17 லட்டத்திற்கும் மேல் விளைநிலங்கள் பாசனநீர் பெறமுடியும். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேட்டூர் அணையிலிருந்து பெறப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்ட்டு இன்று மாலைக்குள் விநாடிக்கு 10000 கன அடியாக திறந்துவிடப்படும். இதனால காவிரி ஆற்றில் யாரும் இறங்கவேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com