\
முழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை‌

முழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை‌

முழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை‌
Published on

மேட்டூர் அணை இன்னும் சில ‌மணி நேரத்தில் தனது முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது. 

மேட்டூர் அணையின் முழுகொள்ளளவு 120 அடியாக உள்ள நிலையில், 119.34 அடியை தற்போது தொட்டு இருக்கிறது. கடந்த சில நாள்களாக கர்நாடக அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், அந்த அணையிலிருந்து‌ தமிழ‌கத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்தது.

இதைத்‌ தொடர்ந்து மேட்டூர் அணை கிடுகிடுவென உயர‌த் தொடங்கியது.‌ அணைக்கான நீர்வரத்து 6‌5 ஆயிரம்‌ கன அடியிலிருந்து 75 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com