\
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு அதிகரிப்பு
Published on

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 60ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை மற்றும் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 60ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணைக்கு வரக்கூடிய தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையிலிருந்து உபரி நீர் திறப்பு மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 16 கண் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நீர்வரத்து அதிகரித்ததால் 38 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com